Menu
Your Cart

காலச்சுவடு பதிப்பகம்

சமனற்ற நீதி | UNEVEN JUSTICE
-5 %
கறுப்பின மக்கள்மீதும் வெள்ளையர் அல்லாதோர்மீதும் அமெரிக்க நீதித்துறையும் அரசும் காட்டுகின்ற ஓடுக்குமுறை தெளிவானது. அதன் இரகசியமான ஒரு பக்கத்தை இந்த நூலில் பார்க்கலாம். அமெரிக்காவின் மக்களாட்சி முறையையும் அதன் குற்றவியல் நீதித்துறையின் நடுநிலைமை பற்றிய மாயைகளையும் இந்நூல் தகர்க்கிறது. ஆழ்ந்த துயரமும் ..
₹404 ₹425
சமீபத்திய காதலி
-5 % Out Of Stock
‘ஆற்றில் மிதந்துகொண்டிருக்கிறது யாரும் விளையாடி முடித்திராத ஒரு விளையாட்டு விளையாட்டைப் பிடித்துக் கரைசேர்க்க ஆற்றில் இறங்கவில்லை யாரும்.’ எஸ். செந்தில்குமாரின் கவிதைகள் புதிய நிலக்காட்சிகளையும், மனக் காட்சிகளையும் பேசுகின்றன. தர்க்கத்தின் மொழியில் சென்று சேர்ந்துவிட இயலாத இடத்துக்கு, இந்தக் கனவுப..
₹38 ₹40
சமூக யதார்த்தமும் இலக்கியப் புனைவும்
-5 %
எம். ஏ. நுஃமான் இலக்கிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். சமூக யதார்த்தத்துக்கும் இலக்கியப் புனைவுகளுக்கும் இடையிலான உறவு இக்கட்டுரைகளில் அலசப்படுகின்றன.  புதுமைப்பித்தன், மௌனி, ந. பிச்சமூர்த்தி, கலைவாணன், க. நா. சு., கி. ராஜநாராயணன், தி. ஜானகிராமன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், வெங்கட் சாமிநா..
₹309 ₹325
சமூக வரலாற்றியல் நோக்கில் தமிழும் தெலுங்கும்
-5 % Out Of Stock
தமிழ் இலக்கண ஆய்வை வரலாற்றுச் சமுதாய மொழியியல் தளத்திற்கு விரிக்கும் முயற்சி இந்நூலில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீரசோழியத்தையும் ஆந்திர சப்த சிந்தாமணியையும் ஒப்பிட்டு, அவற்றின் ஒற்றுமை வேற்றுமைகளுக்குக் காரணமான சமூக, அரசியல், வரலாற்றுக் கூறுகள் இந்நூலில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. சமஸ்கிருத இலக்கண மர..
₹214 ₹225
சமூகவியலும் இலக்கியமும்
-5 %
பேராசிரியர் க. கைலாசபதியின் சரளமான தமிழில் அரை நூற்றாண்டுக்குப் பின்னும் புதுமை குன்றாத இலக்கியச் சமூகவியல் நூல் இது. சமூகவியல் துறையின் தோற்றத்தையும், சமூக மாற்றப் போக்கைக் கருதாத ‘தூய’ சமூகவியலின் போதாமைகளையும் விளக்கி, இலக்கியத்தின் சமூகவியலை இந்நூல் விரிவாக அறிமுகப்படுத்துகிறது. ஆசிரியரின் தனித்..
₹228 ₹240
சரஸ்வதி காலம்
-5 %
“ஒரு தமிழ்ப் பத்திரிகை ஆசிரியராக இருந்த போதிலுங்கூட நண்பர் விஜயபாஸ்கரனால் என் கதைகள் என் விருப்பப்படி இருந்தால் போதும் என எவ்வாறு எண்ண முடிந்தது என்பதை நினைத்து இன்றுவரையிலும் ஆச்சரியப்பட்டுக்கொண்டிருக்கிறேன். மகான்தான் அவர்.” - சுந்தர ராமசாமி அந்த ‘மகான்’ வ.விஜயபாஸ்கரன் நடத்திய அந்தத் தமிழ்ப் பத்தி..
₹214 ₹225
சரோஜா திறக்கும் உலகம்
-5 %
வாழ்க்கையை நேரடியாக நோக்கி எந்தவிதச் சப்பைக்கட்டுகளோ உபதேசங்களோ இல்லாமல் கதைகள் எழுதுபவர்களில் ஒருவர். மாறிவரும் காலம், மாறாத சிலவற்றுடன் தொடர்ந்து செய்ய நேரிடும் மௌன யுத்தங்களின் சாயல்கள் அவர் கதைகளில் உண்டு. இந்த யுத்தத்தில் உள்ள இழுபறி உறவுகள், இறுக்கங்கள், கோபங்கள், சோகங்கள், ஏய்ப்புகள், அடக்கும..
₹356 ₹375
சர்ப்பம் அவளை வஞ்சிக்கவில்லை
-5 %
சர்ப்பம் அவளை வஞ்சிக்கவில்லைஏவாளின் கதையை மறு எழுத்தாக்கம் செய்யும் சிவசங்கருக்கு பைபிள் கதையிலிருந்து கில்தாஸ்டியா வரையிலும் நிறையக் கேள்விகள் எழுகின்றன; விமர்சனங்கள் உண்டாகின்றன; அதிருப்தியும் ஆவேசமும் ஏற்படுகின்றன. கேள்விகளும் விமர்சனங்களும் பல்வேறான வடிவங்களிலும் சாத்தியப்பாடுகளிலும் புனைவாகின்ற..
₹95 ₹100
சற்றே பெரிய கதைகளின் புத்தகம்
-5 %
துரோகமும் ஆற்றாமையும் வஞ்சினமும் நிராதரவும் தோல்வியும் நிராசையும் பெண்ணாகத் திரண்டு ஆணின் முன் நின்று உரையாடும் வலி மிகுந்த புனைவை உருவாக்குகின்றன றஷ்மியின் கதைகள். பழகிய கதைக்களன்களில் புதிய தோற்றத்துடன் வெளிப்படும் கதைகள் இவை. அவரவர்க்கு அவரவர் இலக்குகளைக் குறித்துக் கொடுத்தது வாழ்வு என்று தத்..
₹257 ₹270
சலபதி 50: தொடரும் பயணம்
-5 %
ஆ. இரா. வேங்கடாசலபதிக்கு (1967) 50 வயது நிறைவுற்றதையடுத்து, 2019இல் சென்னையில் நடைபெற்ற அவரது பங்களிப்புகள் குறித்து கருத்தரங்கில் வாசிக்கப் பெற்றவற்றுள் 16 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். காலச்சுவடு, இந்து லிட் பார் லைஃப், கடவு ஆகிய அமைப்புகள் இணைந்து இரு நாள்கள் நிகழ்த்திய 'விரிவும் ஆழமும்' என்ற தல..
₹214 ₹225
சஹீர்
-5 %
சஹீர்புகழ்பெற்ற எழுத்தாளரின் மனைவி ஒருநாள் எந்தச் சுவடுமில்லாமல் காணாமல்போகிறாள். போர்க் களச் செய்தியாளரான அவள் காணாமல்போன மர்மத்தை அறிய விரும்பும் எழுத்தாளர் அவளைத் தேடிப் புறப்படுகிறார். அமெரிக்காவிலிருந்து ஸ்பெயின், பிரான்ஸ், குரேஷியா என நீளும் அவர் பயணம் மத்திய ஆசியாவின் பள்ளத்தாக்கு ஒன்றில் ..
₹238 ₹250
சாஞ்சி
-5 %
புத்தர் வடஇந்தியாவைத் தாண்டிப் பயணம் செய்யவே இல்லை. ஆனால் அவருடைய சீடர்கள் அவரது போதனைகளைத் தெற்காசியா முழுவதும் பரப்பினார்கள்; கடல் கடந்தும் இமயமலை கடந்தும். ஸ்தூபி, பௌத்த சமயத்திற்கேயுரிய ஒரு கட்டட அமைப்பு. அதில் பௌத்தத் துறவிகளின் நினைவுச் சின்னங்கள் பாதுகாக்கப்படுகின்றன. இன்றைய மத்திய பிரதேச மாந..
₹143 ₹150
Showing 553 to 564 of 1302 (109 Pages)